என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிறந்த சேவை
நீங்கள் தேடியது "சிறந்த சேவை"
சிறந்த சேவைக்காக ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
டெல்லியில் உள்ள ‘ஸ்கோச் குரூப்’ என்கிற அமைப்பு, மாநில மற்றும் தேசிய அளவில் சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, நிதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிறந்த சேவையை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ என்கிற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலாவது கட்டப்பணிகள் மூலம் பயணிகளுக்கு தரமான சேவை அளிப்பதுடன், ரெயில் நிலையங்களையும் தரமான முறையில் அமைத்து செயல்படுத்தி வருவதை கவுரவிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கத்தை வழங்குவதாக ஸ்கோச் குரூப் அமைப்பு தெரிவித்தது.
அந்த அமைப்பின் தலைவர் சமீர் கோச்சார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் தங்கப்பதக்கத்தை வழங்கினார்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘மிகச் சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க செயல்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கி வருவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்த உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த சேவை புரிந்த நர்சுகளுக்கு மத்திய அரசின் சார்பில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டன. #InternationalNursesDay #nurses
புதுடெல்லி:
சிறப்பாக மருத்துவ சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் மதிப்புமிக்க ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறும்.
இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். #InternationalNursesDay #nurses

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 35 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். #InternationalNursesDay #nurses
×

X